Sunday, March 22, 2020

Amma (Mom)

16 years ago this week, my mom died an untimely death. This poem is a tribute to her, rooted in my (now sadly fading) memories of her.

அம்மா

பதினாறு வயதினிலே என்னை பிரிந்து சென்றாய் நீ
பதினாறு வருடங்கள் பின்பும் கண்ணில் நிற்கிறாய் நீ

சுற்றி வந்தேன் உன் சேலை நுனியை பிடித்துக்கொண்டு
அமைதியாய் உறங்கினேன் உன் மடியில் படுத்துக்கொண்டு

இனிமையான மாலாடு எனக்கு உருட்டி கொடுப்பாய்
லெமன் சாதத்தில் சதா மஞ்சள் போட மறப்பாய்

உன் கண்மணிபோல் எங்களை தாங்கினாய்
என் கண்களில் கண்ணீர் காண மறுத்தாய்

சொல்லாமல் எங்களை விட்டு சென்றது எனோ?
உன்னை நினைத்துக்கொண்டே நாங்கள் வாழத்தானோ?

நீ கொடுத்த அன்பிற்கு இல்லை அளவு
இறந்தாலும் அமரமானது நம் உறவு

உன் நினைவை மறந்துவிடுவேன் என்று ஒரு பயம்
காலத்துடடன் போட்டி போடும் இந்த ஒரு இதயம்

பேசுவது உன்னுடன் இனி கனவில் மட்டும்
இதுவே இவ்வுலகத்தின் வாழ்க்கை வட்டம்

Transliteration:

Amma

Padhinaaru vayadhinile ennai pirindhu sendraai nee
Padhinaaru varudangal pinbum kannil nirkirai nee

Sutri vandhen un selai nuniyai pidiththukkondu
Amaidhiyaai uranginen un madiyil paduththukkondu

Inimaiyaana maalaadu enakku urutti koduppaai
Lemon saadhaththil sadhaa manjal poda marappaai

Un kanmanipol engalai thaanginaai
En kangalil kanneer kaana maruththaai

Sollamal engalai vittu sendradhu eno? Unnai ninaiththukkonde naangal vaazhaththaano?

Nee koduththa anbirku illai alavu
Irandhaalum amaramaanadhu nam uravu

Un ninaivai marandhuviduven endru oru bhayam
Kaalaththuddan potti podum indha oru idhayam

Pesuvadhu unnudan ini kanavil mattum
Idhuve ivvulagaththin vaazhkkai vattam

Translation:

Mom

You left me when I was sixteen years of age
Yet you stay in my eyes sixteen years hence

Holding the tip of your sari I'd run around you
With my head on your lap I'd sleep in peace

Beautiful balls of roast gram you'd give me
Yet you'd often forget turmeric in lemon rice

You took care of us like the apple of your eye
You were always there to console me when I'd cry

Why did you leave us without saying goodbye?
For us to just live on with you in our thoughts?

Boundless was the love that you gave us
Eternal beyond death is our relationship

Fearful am I of forgetting your memories
But my heart will not cease fighting time

Now I speak with you only in my dreams
For such is this world's circle of life

No comments:

Post a Comment