Saturday, October 28, 2017

Perungadal (The Ocean)

ஈடில்லா அழகு உந்தன் ஆழ்ந்த நீல வண்ணம்,
ஓய்வில்லா உழைப்பிற்கு உன் அலைகள் சிறந்த சின்னம்.

எண்ண முடியாத உயிர்களுக்கு இல்லம் அளிப்பதும் நீயே,
உன்னை ஆள நினைப்பவர்களை அழிப்பதும் நீயே.

உருவகம் நீதான் எங்கள் அறியாமையின் அளவிற்கு,
ஆனால் அதுவே ஊக்கம் அறிந்து கொண்டே வளர்வதற்கு.

உன் மேன்மையை கண்டால் ஓடி விடும் அஹங்காரம்,
உன் நீரில் நின்றாள் களைந்து விடும் மனதின் பாரம்.

இவ்வுலகத்தின் கண்டங்களை பிரித்து வைப்பது உன் பணி,
ஆனால் இந்த நீல கிரகத்தை ஒரு உலகமாய் இணைப்பதும் நீ!

Transliteration


Eedillaa azhagu undhan aazhndha neela vannam,
Oyvillaa uzhaippirku un alaigal sirandha chinnam.

Enna mudiyaadha uyirgalukku illam alippadhum neeye,
Unnai aala ninaippavargalai azhippadhum neeye.

Uruvagam needhan engal ariyaamaiyin alavirku,
Aanal adhuve ookkam arindhu konde valarvadharku.

Un menmaiyai kandaal odi vidum ahangaaram,
Un neeril nindral kalaindhu vidum manadhin baaram.

Ivvulagatthin kandangalai piritthu veippadhu un pani,
Aanal indha neela grahatthai oru ulagamaai inaippadhum nee!

Interpretation in English


Matchless is the beauty of your deep blue,
Your waves are the perfect symbol of persistent effort.

For countless creatures, you are the refuge,
Those who try to conquer you incur your wrath.

You are a metaphor for the extent of our ignorance,
Yet, that is what encourages us to keep on learning.

A sight of your majestic vastness destroys our ego,
While standing in your waters dissolves our worries.

Keeping this world’s continents apart is part of your job,
And yet, you are the grand unifier of this one blue planet!